ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.02) நடைபெற்று வரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தி விளையாடி வருகிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது விளையாடி வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டதின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில்(194 போட்டிகள்) கலந்து கொண்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 193 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அச்சாதனையை தோனி இன்று முறியடித்துள்ளார்.