தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்திற்கு அபராதம்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Steve Smith fined for slow over-rate against Mumbai Indians
Steve Smith fined for slow over-rate against Mumbai InSteve Smith fined for slow over-rate against Mumbai Indiansdians

By

Published : Oct 7, 2020, 7:45 PM IST

Updated : Oct 7, 2020, 7:55 PM IST

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரயல்ஸ் அணியுடன் மொதியது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த குற்றச்சாட்டை போட்டி நடுவர்களும் உறுதிபடுத்தினர்.

இதையடுத்து ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது தலைமையிலான அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்தக் கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:”தொடக்கம் சரியாக அமையாததாலே தோல்வியை சந்தித்தோம்!” - பட்லர்

Last Updated : Oct 7, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details