துபாய்:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 163 ரன்களை குவித்தது.
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று(செப்.21) நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது.
தேவ்தத் படிகல் - ஆரோன் ஃபிஞ்ச் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிகல், ஆரோன் ஃபிஞ்ச் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது.
கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நடராஜன் தனது அறிமுகப் போட்டியிலேயே மிரட்டி வந்த படிகல் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து அரோன் ஃபிஞ்சும் 29 ரன்களுடன் நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜனிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் தனது அதிரடியான ஆட்டத்தில் மிரட்டி வந்த ஏபிடி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார்.
அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 51 ரன்களையும், படிகல் 56 ரன்களையும் சேர்ந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: இத்தாலியன் ஓபன் 2020: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹாலெப்!