தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!

கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Rajasthan Royals opt to bowl
Rajasthan Royals opt to bowl

By

Published : Nov 1, 2020, 7:02 PM IST

Updated : Nov 1, 2020, 7:07 PM IST

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் உள்ளதால், இப்போட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான்: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பட்லர், ரியன் பராக், ராகுல் திவேத்தியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

கொல்கத்தா: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல்,நரைன், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி, நாகர்கோட்டி.

இதையும் படிங்க:‘இது என்னுடைய கடைசி போட்டியல்ல’ - தோனி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

Last Updated : Nov 1, 2020, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details