ரசிகர்களில் எதிர்ப்பார்ப்புகு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடந்த ஆக்.05ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி, பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியின் போது பெங்களூரு அணியின் ஆரோன் ஃபிஞ்சு, பந்துவீச்சாளார் பந்துவீசுவதற்கு முன்னதாகவே நான் ஸ்டிரைக்கர் பட்டையை விட்டு வெளியேறினார். இதனை சூதாரித்த அஸ்வின், அவருக்கு மான்கட் வார்னீங்கை வழங்கினர். இது போட்டியின் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஃபிஞ்சுக்கு மான்கட் வார்னீங் கொடுத்த அஸ்வின் ஏனெனில் இதற்கு முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரின் போது, ரவிசந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் விக்கெட்டை மான்கட் முறையில் வீழ்த்தியிருந்தார். இது அப்போது கடும் விவாதத்திற்கு உள்ளானது.
மான்கட் முறையில் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய் அஸ்வின் இதுகுறித்து பேசிய அஸ்வின், ஃபிஞ்சும் நானும் பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளோம். அதன் காரணமாகவே நான் அவருக்கு மான்கட் வார்னீங் மட்டும் கொடுத்தேன். இனி நான் ஸ்டிரைக்கர் பட்டையை வீட்டு வெளியேறும் வீரர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். இதுகுறித்து நான் ரிக்கி பாண்டிங்கிடமும் ஆலோசித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
பின்னர் பாண்டிங் கூறுகையில், இனி பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது நான் ஸ்டிரைக்கர் பட்டையை விட்டு வெளியேறினார், அந்த அணிக்கு 10 ரன்களை குறைக்க வேண்டும். இதுகுறித்து நான் ஐசிசியிடம் பேசியுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்!