ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் நடக்கும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.
201 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் வீரர்களான ப்ரித்வி ஷா, ரஹானே, தவான் ஆகியோர் மும்பையின் இரட்டை குழல் துப்பாக்கிளான போல்ட், பும்ராவிடம் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தனர். இதனால் டெல்லி அணி ரன் ஏதும் எடுக்காமலேயே 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் அதன்பிறகு களத்திருந்த ஸ்டோய்னிஸ் - அக்சர் படேல் இணை மும்பை பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தது.