தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எல்பிஎல் தொடரை ஒத்திவைத்த எஸ்சிபி.,! - எல்பிஎல் 2020

வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தைக் கருத்தில் கொண்டு லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரை ஒருவாரம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்சிபி) அறிவித்துள்ளது.

Lanka Premier League postponed by a week
Lanka Premier League postponed by a week

By

Published : Sep 30, 2020, 6:37 PM IST

இந்தியாவின் ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இத்தொடரின் முதல் சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல் சீசனை நவம்பர் மாதம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருவதால், நவம்பர் 14ஆம் தேதி நடக்கவிருக்கும் எல்பிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனால் வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தைக் கருத்தில் கொண்டு, எல்பிஎல் தொடரில் முதல் சீசனை ஒரு வாரம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி எல்பிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஏழு அணிகளுடன் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெறும் என்றும், போட்டிகள் அனைத்தும் ரங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகேலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூரியவேவா மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன் : தொடரிலிருந்து விலகிய செரீனா!

ABOUT THE AUTHOR

...view details