தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

”பயோ பபுளில் இருப்பது சாதாரண காரியமல்ல” அனைத்து அணி வீரர்களையும் பாராட்டிய கங்குலி!

துபாய் : ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தொடரை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைத்து அணி வீரர்களுக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

it-was-mentally-tough-in-bio-bubble-ganguly-thanks-players-for-commitment-to-ipl-success
it-was-mentally-tough-in-bio-bubble-ganguly-thanks-players-for-commitment-to-ipl-success

By

Published : Nov 11, 2020, 4:57 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா அல்லது நடக்காதா என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்லின் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்று முடிந்துள்ளன.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாகக் கோப்பையை கைப்பற்றியது. இதனால் நேற்றுடன் ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைத்து அணி வீரர்களுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள், ஐபிஎல் அணிகள், ஐபிஎல் அணியின் அனைத்து வீரர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். பயோ பபுள் சூழலில் தொடர்ந்து இருப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. மனரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் அனைவரின் அர்ப்பணிப்பாலும் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது'' என்றார்.

முன்னதாக அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வழக்கம்போல் ஏப்ரல்-மே காலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபடவுள்ள ரோஹித்!

ABOUT THE AUTHOR

...view details