ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கு பெயர்போன இவர், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் படி எதையும் செய்ததில்லை.
இந்நிலையில் மேக்ஸ்வெல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஐபிஎல் தொடரில் எனது பணி என்ன என்பது குறித்த தெளிவு இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல், “ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது, ஐபிஎல் தொடரில் எனது பணி என்ன என்பது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. ஏனெனில் சர்வதேச போட்டிகளில் எனது ஆட்டம் எவ்வாறு அமையும், எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.