தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: அதிரடியில் அசத்திய ராணா, நரைன்...! டெல்லி அணிக்கு இமாலய இலக்கு! - KKR vs DC match today

டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 195 ரன்களை குவித்துள்ளது.

IPL 2020: KKR VS DC first innings match update
IPL 2020: KKR VS DC first innings match update

By

Published : Oct 24, 2020, 5:17 PM IST

ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா-சுனில் நரைன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினர்.

இதில் சிறப்பாக விளையாடி வந்த நிதீஷ் ராணா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நரைன் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் நிதீஷ் ராணா தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராணா 81 ரன்களையும், சுனில் நரைன் 63 ரன்களையும் குவித்தனர்.

இதையும் படிங்க:வரலாற்றில் ப்ளே-ஆஃப் வாய்ப்பை முதல்முறையாக இழந்த சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details