தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: களமிறங்க தயாரான கெய்ல் - ரசிகர்கள் மகிழ்ச்சி! - ஐபிஎல் 2020

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல், ஒவ்வாமையிலிருந்து குணமடைந்து தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

IPL 2020: Gayle hits nets, recovers from stomach bug
IPL 2020: Gayle hits nets, recovers from stomach bug

By

Published : Oct 13, 2020, 4:15 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கொலகலமாக நடைபெற்று வருகிறது. தொடரில் தற்போது முதல் பாதி சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்து இரண்டாம் பாதி சீசன் தொடங்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கிறிஸ் கெய்ல், உணவு ஒவ்வாமை காரணமாக இதுவரை நடைபெற்ற எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி இந்த சீசனில் படுதோல்விகளையும் சந்திதது.

அணியில் அதிரடியா போட்ஸ்மேன்கள் இருந்தாலும், ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடததால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதற்கிடையில் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த கெய்ல், தற்போது அதிலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

இத்தகவலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் பஞ்சாப் அணியில் கெய்லின் அதிரடி ஆட்டம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு சதம், 28 அரைசதங்களுடன் 4484 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி ஃபேன்னா சும்மாவா... வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர்!

ABOUT THE AUTHOR

...view details