ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு - டெல்லி இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.