தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பீல்டிங்கில் கோட்டைவிட்டால் கோப்பையை வெல்ல முடியாது - வார்னர்

நடராஜன், ரஷீத் கான், மனீஷ் பாண்டே ஆகியோர் இந்தத் தொடரில் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கேட்ச்சுகளையும், கிடைக்கும் வாய்ப்புகளையும் தவறவிட்டால், நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. அந்த வகையில் பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் கண்டாலும் பீல்டிங்கில் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாக டேவிட் வார்னர் கூறினார்.

David warner
டேவிட் வார்னர்

By

Published : Nov 9, 2020, 8:44 AM IST

அபுதாபி: 'பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டபோதிலும் பீல்டிங்கில் கோட்டைவிட்டோம்' என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து சன் ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறினார்.

இதுதொடர்பாக டேவிட் வார்னர் கூறியதாவது: 'எல்லோரும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணி பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். தொடரின் தொடக்கத்தில் எங்கள் அணி பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில்தான் நாங்கள் வெளிப்படுத்த விரும்பிய ஆட்டத்தை விளையாடினோம். எங்கள் அணியினரின் செயல்பாடுகளைக் கண்டு பெருமையடைகிறேன்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரை நடராஜன், ரஷீத் கான், மனீஷ் பாண்டே அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

கேட்ச்சுகளையும், கிடைக்கும் வாய்ப்புகளையும் தவறவிட்டால் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. அந்த வகையில் பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் கண்ட நாங்கள், பீல்டிங்கில் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தினோம்.

சில முக்கிய வீரர்கள் காயம் அடைந்தபோதிலும், மற்ற வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தால், நாங்கள் தகுதிச்சுற்று வரை வந்ததை நினைத்துப் பெருமை கொள்கிறோம்' என்றார்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாம் தகுதிப் போட்டியை (குவாலிஃபயர் 2) வென்று, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது, டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்தத் தொடரில் கடைசியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது. பின்னர் நடைபெற்ற தகுதிப் போட்டியில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

13ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணி நாளை (நவ. 10) விளையாடவுள்ளன.

இதையும் படிங்க: முதல்முறையாக இறுதி போட்டிக்கு சென்ற டெல்லி!

ABOUT THE AUTHOR

...view details