தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கேகேஆர் கனவை தகர்க்குமா சிஎஸ்கே? - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

IPL 13: KKR looking to arrest slide with win against CSK
IPL 13: KKR looking to arrest slide with win against CSK

By

Published : Oct 29, 2020, 3:51 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றுக்கான முதல் மூன்று இடங்களை மும்பை, பெங்களூரு, டெல்லி அணிகள் பிடித்துள்ள நிலையில், நான்காவது இடத்தைப் பிடிக்க நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அதிலும் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைத்து சீசன்களிலுன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கு கிறது.

இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் கனவு நனவாகும் என்பதில் சந்தேகமில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மன் கில், திரிபாதி, ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், நரைன் ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது பணியைத் திறம்பட செய்து வருகின்றனர். இருப்பினும் அதிரடி வீரர் சுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

வருண் சக்ரவர்த்தி

பந்துவீச்சு தரப்பில் பெர்குசன், கம்மின்ஸ் ஆகியோர் தொடர்ந்து தங்களது வேகத்தைக் காட்டி வருவதால், இன்றைய போட்டியிலும் அது எதிரொலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவ்வொரு வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெயர், இந்த சீசனில் சென்னை அணியை விட்டுச் சென்றது.

மகேந்திர சிங் தோனி

வீரர்களின் தொடர்ச்சியான சொதப்பலினால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ஆறுதல் தேடும் முனைப்பில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளதால், இனி வரும் போட்டிகளிலும் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே ரசிகர்கள் காத்துள்ளனர்.

உத்தேச அணி:

சிஎஸ்கே: தோனி (கேப்டன்), சாம் கரண், டூ ப்ளஸிஸ், ராயுடு, ஜெகதீசன், கெய்க்வாட், மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா, தீபக் சாஹர்,மோனு குமார், தாஹிர்.

கேகேஆர்: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், நரைன், கம்மின்ஸ்/ ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, நாகர்கோட்டி, பெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க:இந்தியா தொடருக்கான ஆஸி., அணி அறிவிப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details