துபாய்:உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அந்த அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் நேற்றிரவு (செப்.22) உலகின் மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் புர்ஜ் கலிஃபா கட்டடத்தில், கொல்கத்தா அணியினரை கவுரவிக்கும் விதமாக அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் எல்.இ.டி விளக்குகளால் ஒளிர செய்தனர்.