பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில், ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் சிராஜ் வீசிய பந்து டேவிட் வார்னரின் பேட்டிற்கும், தொடைப்பகுதிக்கும் நடுவில் சென்றது.
இதனால் ஆர்சிபி அணி கள நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆஎஎஸ் கேட்டது. அதில் சிராஜ் வீசிய பந்து வார்னரின் கையுறையை உரசியதா அல்லது பேன்ட்டினை உரசியதா என்று உறுதியாகத் தெரியவில்லை. பல நிமிடங்களாக உற்றுப்பார்த்த மூன்றாம் நடுவர், அவுட் எனத் தீர்ப்பு வழங்கினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் நடுவர்களின் விதிமுறைப்படி விக்கெட்டில் மூன்றாம் நடுவருக்கும் சந்தேகம் இருந்தால், அது பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக அமைய வேண்டும். ஆனால் நேற்று பந்துவீச்சாளருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.