தமிழ்நாடு

tamil nadu

ரூல்ஸ் தெரியாது... ஃபைன் கட்றேன்... குருணால் பாண்டியா ரிலீஸ்!

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியா, அளவுக்கு அதிகமான தங்கத்தை கொண்டு வந்ததற்காக அபராதம் கட்டியபின் விடுவிக்கப்பட்டார்.

By

Published : Nov 12, 2020, 10:56 PM IST

Published : Nov 12, 2020, 10:56 PM IST

dri-fines-krunal-pandya-for-carrying-excess-valuables
dri-fines-krunal-pandya-for-carrying-excess-valuables

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. இதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் நாடு திரும்பினர்.

குருணால் பாண்டியா மும்பை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரது பைகளில் அளவுக்கு அதிகமான தங்கம், கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது வருவாய் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குருணால் பாண்டியாவிடம் விசாரணை செய்தபோது, விதிகள் தெரியாமல் கொண்டு வந்துவிட்டேன். இனிமேல் இதுபோல் நடக்காது. எவ்வளவு அபராதம் வேண்டுமானாலும் கட்டிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து வருவாய் புலனாய்வுத் துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தைக் கட்டியபின், குருணால் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு 'பீஸ்ட்'

ABOUT THE AUTHOR

...view details