தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘இது என்னுடைய கடைசி போட்டியல்ல’ - தோனி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்! - டேனி மோரிஸம்

இது என்னுடைய கடைசி போட்டியல்ல என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளது, சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Definitely not my last CSK game: Dhoni confirms presence in IPL 2021
Definitely not my last CSK game: Dhoni confirms presence in IPL 2021

By

Published : Nov 1, 2020, 4:37 PM IST

ஐபிஎல் தொடரில் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் தனது லீக்கின் கடைசி போட்டியை விளையாடி வருகிறது.

இப்போட்டியின் போது சிஎஸ்கே அணி கேப்டன் தோனியிடன், விளையாட்டு தொலைக்காட்சி வர்ணனையாளர் டேனி மோரிசன் ‘சிஎஸ்கே அணிக்காக இது உங்களில் கடைசி ஆட்டமா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தோனி, நிச்சயமாக கிடையாது என ஒற்றை வரியில் முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக தோனி களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக சென்னை அணியின் தலைமை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் கூறுகையில், “நிச்சயமாக 2021ஆம் ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும்” என்று தெரிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் சீசன் தொடக்கம் முதல் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையையும், இரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details