தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றைப் படைத்த நோர்ட்ஜே!

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய நபர் என்ற டேல் ஸ்டெயினின் எட்டு வருட சாதனையை முறியடித்தார் அன்ரிச் நோர்ட்ஜே.

DC's Anrich Nortje bowls fastest ball in IPL history
DC's Anrich Nortje bowls fastest ball in IPL history

By

Published : Oct 15, 2020, 3:05 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்கள் பெரும் ஆதரவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

இப்போட்டியில் டெல்லி அணிக்காக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே, தனது முதல் ஓவரிலேயே அசுர வேகத்தில் பந்துவீசி ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் விக்கெட்டை கைப்பற்றினார். அதோடு ஐபிஎல் தொடரில் எட்டு வருடமாக யாராலும் நெருங்க முடியாமல் இருந்த ஸ்டெயினின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

அச்சாதனையானது, ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீசிய (154.4 கிமீ) நபர் என்ற டேல் ஸ்டெயினின் சாதனையை, நேற்றையப் போட்டியில் ஆன்ரிச் நோர்ட்ஜே 156.2 கிமீ வேகத்தில் பந்துவீசி முறியடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

மேலும் இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 153.62 கிமீ வேகத்தில் பந்துவீசியதே, அதிவேக பந்துவீச்சாக அமைந்திருந்தது. தற்போது அதனையும் அன்ரிச் நோர்ட்ஜே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அனந்த்நாக் மகளிர் கிரிக்கெட் லீக்: இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து கூறிய சச்சின்...!

ABOUT THE AUTHOR

...view details