தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி' - அஸ்வின்! - ஐபிஎல் 2020

ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியின் போது காயமடைந்த டெல்லி அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது காயம் குணமடைந்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Ashwin likely to play in Delhi Capitals' next game
Ashwin likely to play in Delhi Capitals' next game

By

Published : Sep 22, 2020, 7:20 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக களமிறங்கிய அஸ்வின், தனது முதல் ஓவரிலேயே கருண் நாயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அந்த ஓவரின் கடைசிப்பந்தை தடுக்க முயன்று தாவியபோது அஸ்வினின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்ட அஸ்வினை, அணியின் மருத்துவர்கள் பெவிலியனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அஸ்வின் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலக நேரிடும் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறாக அஸ்வின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்,“நான் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறியபோது வேதனையாக இருந்தது, ஆனால் என்னுடைய காயம் தற்போது சரியாகிவிட்டது. மேலும் ஸ்கேன் அறிக்கைகளும் மிகவும் ஊக்கமளிக்கின்றன. உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் செப்.25ஆம் தேதி சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரவிசந்திரன் அஸ்வின் களமிறங்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இத்தாலியன் ஓபன் 2020: ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஜோகோவிச்!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details