2020ஆம் ஆண்டு 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 16 அணிகளில் 13 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை பிடிக்கும் அணி எது என்பது இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் மலேசியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (ஐ.அ.அ.), ஓமன், சிங்கப்பூர் மற்றும் நேபால் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய குவாலிஃபயர் தொடர் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்தத் தொடரில் முதலிடம் பெறும் அணிக்கு 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள யு-19 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 13ஆவது அணியாக தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நாட்களுக்கு முன்னால் நைஜீரிய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய குவாலிஃபயர் போட்டிகள் விவரம்:
- ஏப்ரல் 12 : மலேசியா vs ஐ.அ.அ. ; குவைத் vs ஓமன் ; சிங்கப்பூர் vs நேபால்
- ஏப்ரல் 13 : ஐ.அ.அ. vs நேபால் ; குவைத் vs சிங்கப்பூர் ; மலேசியா vs ஓமன்
- ஏப்ரல் 15 : ஓமன் vs சிங்கப்பூர் ; மலேசியா vs நேபால் ; ஐ.அ.அ. vs குவைத்
- ஏப்ரல் 16 : மலேசியா vs குவைத் ; ஐ.அ.அ. vs சிங்கப்பூர்; ஓமன் vs நேபால்
- ஏப்ரல் 18 : குவைத் vs நேபால் ; ஐ.அ.அ. vs ஓமன் ; மலேசியா vs சிங்கப்பூர்