தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூருக்காக களமிறங்கும் தென்னாப்பிரிக்க வேகம் ஸ்டெயின்! - தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Steyn

By

Published : Apr 13, 2019, 9:58 AM IST

12ஆவது ஐபிஎல் சீசன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் காயம் காரனமாக வெளியேறியதையடுத்து, ஸ்டெயினை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

முன்னதாக டேல் ஸ்டெயின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய பாஸ்போர்ட்டுடன் கூடிய விசாவினை பதிவிட்டதையடுத்து, அவர் பெங்களூரு அணிக்காக களமிறங்கவுள்ளார் என ரசிகர்கள் கொண்டாடிவந்தனர். இதனை ஆர்சிபி நிர்வாகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பங்கேற்க இருப்பது குறித்த மகிழ்ச்சியை வீடியோ மூலம் டேல் ஸ்டெயின் வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 90 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் ஏலத்தின்போது யாரும் ஏலம் எடுக்க முன்வாரத நிலையில், ஆர்சிபி அணி தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details