தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

திரும்ப வந்துட்டேனு சொல்லு... ஆர்சிபியின் முதல் வெற்றி! - Kohli - Ab de

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆர்சிபியின் முதல் வெற்றி!

By

Published : Apr 14, 2019, 12:00 AM IST

மொகாலியில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கெயில் 99 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.

இதைத்தொடர்ந்து, 174 என்ற ரன்கள் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, பார்திவ் படேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விராட் கோலி - பார்திவ் படேல் இணை தொடக்கத்தில் அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 43 ரன்களை சேர்த்த நிலையில், பார்த்திவ் படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலி

இதைத்தொடர்ந்து, களத்தில் வந்த டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்த கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 36ஆவது அரைசதத்தை விளாசினார். மறுமுனையில், கோலிக்கு ஏத்தவாறு டி வில்லியர்ஸ் ஒத்துழைத்தார். இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 67 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 15.3 ஓவர்களில் 128 ரன்களை எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் - டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடியான ஆடினர். ஆன்ட்ரூவ் டை வீசிய 18ஆவது ஓவரில் இந்த இணை 18 ரன்களும், 19ஆவது ஓவரில் 14 ரன்களையும் சேர்த்தால், இறுதி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த மார்கஸ் ஸ்டோயினிஸ் முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் இரண்டு ரன்களை ஓடி பெங்களூரு அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

டி வில்லியர்ஸ்

இப்போட்டியில், ஃபினிஷவர் ரோலில் பொறுப்புடன் ஆடிய டி வில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 31ஆவது அரைசதம் விளாசினார். 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என அவர் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

இதன் மூலம் பெங்களூரு அணி இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரில் தொடர்ந்து சந்தித்த ஆறு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details