தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்டிங்கில் அடக்கி வாசிக்கும் ஹைதராபாத்! - கெயில்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஹைதராபாத் அணி பேட்டிங்

By

Published : Apr 8, 2019, 8:39 PM IST

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஹைதராபாத் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் மொகாலியில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில் முருகன் அஷ்வின், ஆன்ட்ரூவ் டை ஆகியோருக்கு பதிலாக முஜிப்-உர்-ரஹ்மான் மற்றும் அன்கீட் ராஜ்புட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுமுனையில், ஹைதராபாத் அணி, மும்பைக்கு எதிராக விளையாடிய 11 வீரர்கள் கொண்ட அதே அணியுடன் களமிறங்குகிறது. இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என தலா ஆறு புள்ளிகளை பெற்றுள்ளன.

ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி ஆறாவது இடத்திலும் விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இறுதியாக ஆடிய போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக விளையாடுவார்கள் என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியில் ஜானி பேயர்ஸ்டோவ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எப்போதும் அதிரடியாக விளையாடும் ஜானி பேயர்ஸ்டோவ் இம்முறை அடக்கி வாசித்தார். இதையடுத்து, பஞ்சாப் வீரர் முஜிப்-உர்-ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரில் அவர் 1 ரன்னோடு அஷ்வினிடம் கேட்ச் தந்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர், டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகின்றார். சற்று முன்வரை ஹைதராபாத் அணி ஆறு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் வார்னர், விஜய் சங்கர் ஆகியோர் தலா 9 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.

ஹைதரபாத் அணி விவரம்: வார்னர், பேயர்ஸ்டோவ், விஜய் சங்கர், யூசப் பதான், மணிஷ் பாண்டே, முகமது நபி, தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார்(கேப்டன்), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்.

பஞ்சாப் அணி விவரம்: கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், டேவிட் மில்லர், மந்திப் சிங், சாம் கரண், அஷ்வின், அன்கீட் ராஜ்புட், முகமது ஷமி, முஜிப்-உர்-ரஹ்மான்.

ABOUT THE AUTHOR

...view details