தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'சிஎஸ்கே - ஆர்சிபி கடைசி பந்து' குறித்து நெகிழும் பார்திவ் படேல்! - பார்த்திவ் படேல்

பெங்களூரு: கடைசிப் பந்தை தோனி மிஸ் செய்வார் என்று, தான் எதிர்பார்க்கவே இல்லை என பெங்களூரு வீரர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

'சிஎஸ்கே - ஆர்சிபி கடைசி பந்து' குறித்து நெகிழும் பார்த்திவ் படேல்

By

Published : Apr 22, 2019, 5:47 PM IST

Updated : Apr 23, 2019, 4:12 PM IST

இது குறித்து பார்திவ் படேல் கூறுகையில்,

"தோனியை ஆஃப் சைடில் ஆட வைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் பிளான் செய்தோம். அதன்படியே, உமேஷ் யாதவை ஆஃப் சைடில் ஸ்லோயர் பந்தை வீசச் சொன்னோம். அவரும் அதேபோன்று கச்சிதமாக பந்துவீசினார். ஆனால் தோனி அந்தப் பந்தை மிஸ் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

தோனி எப்படிப்பட்ட வீரர் என்று அனைவருக்கும் தெரியும். கடைசி மூன்று முதல், நான்கு ஓவர்களில் அவர் அதிரடியாக விளையாடி தனி ஒருவராக அணியை வெற்றிபெற வைப்பார் என்று அனைவருக்கும் தெரியும்.

பெங்களூரு சின்னசாமி, மும்பை வான்கடே போன்ற மைதானங்கள் சிறியதாக இருப்பதால், சேஸிங்கில் கடைசி ஐந்து ஓவரில் 80 முதல் 90 ரன்கள் இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

எனது ஆட்டத்தை மெருகேற்றுவதற்காக நான் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் பேட்டிங் செய்யும்போது, நான் அதிகமாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவே முயற்சிப்பேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 162 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டன.

பெங்களூரு வீரர் உமேஷ் யாதவின் கடைசி ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 24 ரன்களை சேர்த்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பந்தைத் தவற விட்டார்.

இதைத்தொடர்ந்து, ஒரு ரன் எடுத்து போட்டியை டை செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஷர்துல் தாக்கூர் கிரிஸுக்கு வருவதற்குள், பார்திவ் படேல் ரன் அவுட் செய்தார். இதனால், பெங்களூரு அணி ஐந்து வருடங்களுக்குப் பிறகு சென்னை அணியை முதன்முறையாக வீழ்த்தியுள்ளது.

இப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அந்த அணியின் விக்கெட் கீப்பரும், ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான பார்திவ் படேல்தான். நேற்றையப் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் அதிக ரன்கள் (53), அதிக சிக்சர்கள் (4) மட்டுமின்றி, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஷர்துல் தாக்கூரை ரன் அவுட் செய்து பார்திவ் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Last Updated : Apr 23, 2019, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details