தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஸலை சமாளிக்குமா பெங்களூரு? - Kohli

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

ரஸலை சமாளிக்குமா பெங்களூரு?

By

Published : Apr 19, 2019, 1:01 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் கட்ட லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 35ஆவது லீக் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் பெங்களூரு அணி மிகவும் பரிதாப நிலையில் உள்ளது. விளைாடிய 8 போட்டிகளில் 7 தோல்வி, ஒரு வெற்றி என இரண்டே புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சற்று கடினம் என்றுதான் தோன்றுகிறது.

பெங்களூரு

இதனால், வரும் போட்டிகளில் அந்த அணி பல்வேறு முயற்சிகளை பரிசோதனை செய்யலாம் என கூறப்படுகிறது. மறுமுனையில், 8 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. டெல்லி, சென்னை ஆகிய அணிகளிடம் கொல்கத்தா அணி வரிசையாக அடிவாங்கியது. இதனால், இன்றைய போட்டியில் அந்த அணி பெங்களூருவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முன்னேறுவதற்கு முயற்சி செய்வார்கள் என நம்பப்படுகிறது.

முன்னதாக, இந்தத் தொடரில் இவ்விரு அணிகள் பெங்களூருவில் மோதிய போட்டியில், ரஸல் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் தன்வசப்படுத்தினார். 206 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ரஸல் ஆட்டத்தை 13 பந்துகளிலேயே முடித்துவிட்டார்.

ரஸல்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வானவேடிக்கை காட்டிய ரஸல், இன்று பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தாவிலும் பவுண்டரி மழை பொழிவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், ரஸலின் அதிரடியான ஆட்டத்தை சமாளிப்பதற்காக பெங்களூரு அணியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டெயின் களமிறங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details