தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யாரு உள்ளே? யாரு வெளியே? பஞ்சாப்பை எதிர்கொள்ளும் கொல்கத்தா! - KLRahul

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை தீர்மானிக்கும் வாழ்வா சாவா ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.

kxipvskkr

By

Published : May 3, 2019, 7:30 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறும் இப்போட்டியில், இரு அணிகளும் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றன.

இரண்டு அணிகளுக்கும் தமிழக வீரர்கள் தலைமை வகிப்பது மட்டுமின்றி இந்த சீசனில் வெற்றி, தோல்வி என மாறி மாறி பெறுவதிலும் இந்த அணிகளுக்குள் ஒற்றுமையாக அமைந்துள்ளது. குறிப்பாக கொல்கத்தா அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் இறுதியாக தொடர் தோல்விகளை சந்தித்ததால் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் அந்த அணி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடைசியாக ஆடிய போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் அணியும் இறுதியாக ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

கொல்கத்தா அணியின் மிகப்பெரி துருப்புச் சீட்டு என்றால் அது வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ரஸ்ஸல்தான். ஏனெனில் அவருக்கு வீசப்படும் பந்துகளை அவர் பெரும்பாலும் மைதானத்தில் உள்ள ரசிகர்களின் கைக்கு சிக்ஸர்களாகவே அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பு தொடரில் அவர் வெறும் 11 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை விளாசி பவுலர்களை திணறடித்துள்ளார். இதேபோன்று அந்த அணியின் லின், நரைன், ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக், கில் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். பவுலிங்கில் சாவ்லா, ரஸ்ஸல், கர்னே சிறப்பாக செயல்படுகின்றனர்.

கொல்கத்தா அணி வீரர்கள்

பஞ்சாப் அணியை பொறுத்தமட்டில் அந்த அணியின் கெயில் சில போட்டிகளில் புயல் போன்ற ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். அதே சமயம் கே.எல்.ராகுல், பட்லர், சாஹா என பேட்டிங் வரிசை சிறப்பாகவே உள்ளது. பவுலிங்கில் கேப்டன் அஸ்வின், ஷமி, கர்ரான் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

கெயில் - கே.எல்.ராகுல்

இரு அணிகளும் தலா 12 போட்டிகளில் ஆடி 5 ஆட்டங்களில் மட்டும் வெற்றி, 7 போட்டியில் தோல்வி கண்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்யை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இரு அணியும் தங்களது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். எனவே இன்று மொகாலியில் ரசிகர்கள் கெயில்-ரஸல் என்ற இரண்டு பெரிய புயல்களை பார்க்க உள்ளனர். இரண்டு புயல்களும் ஒரே நேரத்தில் வீசினால் சிக்ஸர் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கக் கூடும் என்பதே கிரிக்கெட் ஆய்வு மையத்தின் கருத்தாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details