உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக நான்காம் நிலையில் களமிறங்கும் வீரருக்கான தேர்வு தீவிரமாகியுள்ளது. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், "நான்காவதாக களமிறங்க உள்ள வீரர் குறித்து அதிக தேடுதல் இருந்து வருகிறது. நாங்கள் விளையாடுகையில், இந்த வீரர் இந்த நிலையில்தான் ஆட வேண்டும் எனத் தீர்மானித்தோம். இப்போது அனைத்து வீரர்களும் எல்லா நிலைகளிலும் சிறப்பாக ஆடுகின்றனர். இதனால் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் களமிறங்கினாலே போதுமானது" எனக் கூறினார்.
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் களமிறங்க வேண்டும் : கபில் தேவ் அறிவுரை!
பெங்களூரு : இந்திய அணியில் நான்காம் நிலையில் களமிறங்கும் வீரருக்குக்கான தேர்வு முடிவடையாத நிலையில், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் களமிறங்க வேண்டும் என கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
kapil
மேலும், "தற்போதைய சூழ்நிலையில் தோனி மிகவும் பிடித்த வீரர். விக்கெட் கீப்பர்களையும் ஆல்-ரவுண்டராக கணக்கிட்டால், தோனிதான் சிறந்த ஆல்-ரவுண்டர். உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். இது அனைத்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஷ்வர் குமார் முக்கிய வீரராக இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.