12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 188 ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஏழு சிக்சர்கள் என 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதில், குறிப்பாக மும்பை அணியின் பந்துவீச்சாளரான அல்ஸாரி ஜோசப் வீசிய 13ஆவது ஓவரை இவர் வெளுத்து வாங்கியுள்ளார். முதல் பந்தில், சிக்சர் அடித்த பட்லர் அடுத்து எதிர்கொண்ட நான்கு பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டு பின் கடைசி பந்தை சிக்சர் அடித்து அந்த ஓவரை முடித்தார். அந்த ஓவரில் (6,4,4,4,4,6) என மொத்தம் 28 ரன்களை இவர் விளாசியதால், ஆட்டத்தின் போக்கு மும்பை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு முற்றிலும் மாறியது.