12 ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றையப் போட்டியில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதனோடு, 4000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
வார்னரின் சாதனையை முறியடித்த கெய்ல்! - ஐபிஎல்
ஜெய்பூர் : ஐபிஎல்-ல் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விரைவாக 4 ஆயிரம் ரன்களை எடுத்து வார்னரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், 114 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் அடித்த வார்னரின் சாதனையை, கெய்ல் 113 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எடுத்து வாரினரின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த 9-வது வீரராகவும், வெளிநாட்டு வீரர்களில் நான்காயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனிடையே, சென்னை - பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின்போது, சென்னை அணி வீரர் ரெய்னா முதன் முறையாக 5000 ரன்களை கடந்து சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.