இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் -பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஒவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 67 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரஹானே - பட்லர் இணை அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் பட்லர் - ஸ்மித் இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை அட்டகாசமாக எதிர்த்து ஆடியது. 12-வது ஓவரை மொயின் அலி வீசியபோது, பட்லர் ஐபிஎல் தனது ஏழாவது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிய பட்லர் 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, திரிபாதி களமிறங்கினார்.