இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் தொடரின் தொடக்கத்தில் ஆடிய 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வெற்றிபெற்று கெத்து காட்டியது.
இந்நிலையில், அடுத்ததாக நடைபெற்ற 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்து திணறி வருகிறது. கொல்கத்தா பேட்ஸ்மேன்களான ராணா, லின், ரஸல், நரைன், கில் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இதனை சரிசெய்வார் என எதிர்பார்க்கலாம்.
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ரஹானே, ஸ்மித், சஞ்சு சாம்சன், ஆர்ச்சர், குல்கர்னி ஆகியோர் தற்போது சிறப்பான ஃபார்மிற்கு வந்துள்ளதால் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.