தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2019, 9:37 PM IST

ETV Bharat / sports

மகளிர் ஐபிஎல்: சூப்பர்நோவாஸ் சாம்பியன்

மகளிர் டி20 கிரிக்கெட் சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர்நோவாஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மகளிர் ஐபிஎல்: சூப்பர் நோவாஸ் சாம்பியன்

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல, மகளிருக்கான டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியை எதிர்கொண்டது.

இதில், டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த வெலாசிட்டி அணி, சூப்பர்நோவாஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தது. சுஷ்மா வர்மா 40 ரன்கள் அடித்தார்.

வெலாசிட்டி

இதைத்தொடர்ந்து, 122 ரன் இலக்குடன் ஆடிய சூப்பர்நோவாஸ் அணி அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த தருணத்தில், கடைசி ஓவரின் முதல் பந்தை வீணடித்த ஹர்மன்ப்ரீத் கவுர், அடுத்த பந்திலேயே 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

இதையடுத்து, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், களத்தில் இருந்த ராதா யாதவ் முதலிரண்டு பந்துகளில் நான்கு ரன்களை சேர்த்ததால், ஆட்டம் சமநிலையில் வந்தது.

பின் கடைசி பந்தில் கூலாக இருந்த ராதா யாதவ், பவுண்டரி விளாசினார். இதனால், சூப்பர்நோவாஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.

ABOUT THE AUTHOR

...view details