டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு நடுவே டக்-அவுட்டில் பேசிய அனில் கும்ப்ளே, இந்திய டெஸ்ட் அணி வீரர்களான புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியானவர்களே என்றும் தற்போது இஷாந்த் ஷர்மா டெல்லி அணியில் விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட புஜாரா தகுதியானவரே : அனில் கும்ப்ளே! - pujara
இந்திய டெஸ்ட் அணி வீரர்களான புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியானவர்களே என இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே
கடந்த ஐபிஎல் தொடரில் இஷாந்த் ஷர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலையில், இந்த ஆண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்ததுள்ளது. மேலும், இஷாந்த் ஷர்மா இரண்டு போட்டிகளில் பங்கேற்று மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2014ஆம் ஆண்டுக்குப் பின் புஜாராவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் 61 பந்துகளில் அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.