தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இறுதிப் போட்டியாக இருந்தாலும் நான் மன்கட் செய்ய மாட்டேன்: பென் ஸ்டோக்ஸ் - பட்லர்

ஜெய்ப்பூர்: களத்தில் விராட் கோலியே இருந்தாலும், நான் பந்துவீசும் போது அவரை மன்கட் முறையில் அவுட் செய்ய மாட்டேன் என ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்

By

Published : Mar 26, 2019, 7:29 PM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்தார். இதனால், பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது சரியல்ல, ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை அவர் மீறியுள்ளார் என பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஐசிசி விதிப்படிதான் அவர் நடந்துக்கொண்டார் என பிரபல வர்ணணையாளரும் கிரிக்கெட் விமர்சகருமான ஹர்ஷா போக்ளே அஷ்வினுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பரத் தூதுவரும் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அஷ்வினை போலவே பென் ஸ்டோக்ஸும் விராட் கோலியை மன்கட் முறையில் அவுட் ஆக்கினால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அஷ்வின் போன்ற வீரர் இதுப் போன்ற செயலில் ஈடுபட்டது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. இந்த செயலினால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் ஏரளமான ரசிகர்களை இழந்துள்ளனர் என பதிவிட்டார்.

இதற்கு பென் ஸ்டோக்ஸ், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நான் விளையாடுவேன் என நினைக்கிறேன். ஒருவேளை இறுதிப் போட்டியில் விராட் கோலி களத்தில் இருந்தால், அவரை நான் ஒருபோதும் மன்கட் முறையில் அவுட் செய்யமாட்டேன் என ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அஷ்வின் உள்ளிட்ட அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் தொடரில் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்போடு விளையாடுவோம் என உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details