தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாடகரான 'சென்னை சூப்பர் கிங்ஸ் புலவர்' ஹர்பஜன் சிங்! - ஹர்பஜன் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன் சிங், தமிழக மக்களுக்காக தனது முதல் தமிழ் பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

csk

By

Published : Mar 30, 2019, 12:55 PM IST

Updated : Mar 30, 2019, 1:39 PM IST

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில், ஹர்பஜன் சிங் தமிழக மக்களுக்காக முதல் முறையாக தமிழில் கானா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஹர்பஜன் சிங்

இதுகுறித்து அவரது ட்விட்டரில், “அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம். என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு. இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல... கேளு கேளு இது கானா பாட்டு” என்று குறிப்பிட்டு அவர் பாடிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னும் தமிழில் ரஜினிகாந்த் முதல் பல நடிகர்கள் பேசிய பிரபல பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.



Last Updated : Mar 30, 2019, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details