தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தமிழில் மழலை மொழி பேசிய ஷிவா தோனி! - thaladhoni

தல தோனி தமிழில் கேட்கும் கேள்விக்கு, அவரது மகளான ஷிவா தோனி தமிழிலேயே பதிலளிக்கும் அவரது மழலைப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் வைரலாகியுள்ளது.

ஸிவா தோனியுடன் தல தோனி

By

Published : Mar 25, 2019, 1:57 PM IST

சென்னை அணி கேப்டன் தல தோனியின் செல்லமகள் ஷிவா தோனி. இவர் தோனியுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளும், விளையாட்டுகளும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வாடிக்கை. இதற்கென இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

தற்போது தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் பேசிய ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மகளிடம் தோனி (தமிழில்) :'எப்படி இருக்கீங்க' எனக் கேட்ட கேள்விக்கு...

ஷிவா : 'நல்லா இருக்கேன்' என பதில் அளிப்பார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் அந்த வீடியோவில், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும், எப்படி இருக்கீங்க என கேட்பதும், ஸிவா தோனி அந்தந்த மொழிகளில் அதற்குசரியாக பதிலளிப்பதும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில் தோனி தனது மகளுடன் விளையாடுவதையும் ரசிகர்கள் ரசித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details