தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஐபிஎல் தொடரில் டாஸ் வென்றால் தோனி என்ன செய்வார்?' - Thala Dhoni

ஐபிஎல் தொடரில் டாஸ் வென்றால் சென்னை அணி கேப்டன் தோனி என்ன செய்வார் என ஐஐடி தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல்

By

Published : May 9, 2019, 1:38 PM IST

Updated : May 9, 2019, 2:02 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை அணி ப்ளே-ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றுமுறை டாஸ் வென்ற கேப்டன் தோனி மூன்று முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருப்பார்.

இந்நிலையில், 'நடைபெறவிருக்கும் (நடந்துமுடிந்துவிட்டது) மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால், சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதனைத் தேர்ந்தெடுப்பார்?' என ஐஐடி தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வினாத்தாள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

Last Updated : May 9, 2019, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details