12-வது ஐபிஎல் சீசன் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய ஹைதராபாத் அணி, கொல்கத்தாவிற்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் வார்னர் 85 ரன்கள் எடுத்தார்.
'கம்பேக்' போட்டியில் கெத்து காட்டிய வார்னர்!
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், தடைக்கு பின்னர் இன்று களமிறங்கிய வார்னர், 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட வார்னருக்கு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு ஆண்டுக்கு பின்னர், ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய வார்னர் தொடக்கம் முதலே கொல்கத்தாவின் பந்துவீச்சை பொளந்து கட்டினார். இவரது அதிரடியான ஆட்டத்தால் 31 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார்.
கம்பேக் போட்டியில் அரைசதம் அடித்து பழைய பார்மை தொடர்வதால், இதனை ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.