இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, மும்பை அணியை பேட்டிங் ஆட பணித்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா - டி காக் இணை களமிறங்கியது. இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் - ரோஹித் ஷர்மா இணை நிதாரணமாக ரன்களை சேர்த்தனர். ரோஹித் ஷர்மா 18 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் - குருணால் பாண்டியா இணை சென்னை அணியின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. மிடில் ஓவர்களில் சென்னை அணிக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட, மும்பை அணியின் ஸ்கோர் 15.4 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.
அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் இதனையடுத்து, அதிரடியாக ஆடிய குருணால் பாண்டியா 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் தனது 5-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின்னர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 59 ரன்களில் பிராவோ பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பிராவோ பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட பொல்லார்ட் இதனையடுத்து ஹர்திக் பாண்டியா - பொல்லார்ட் இணை களத்தில் இருந்தது. தாக்கூர் வீசிய 19-வது ஓவரில், மும்பை அணி 16 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரை வீச பிராவோ அழைக்கப்பட்டார். அந்த ஓவரில், பொல்லார்ட் ஒரு சிக்ஸர் அடிக்க, ஹர்திக் பாண்டியா ஒரு ஹெலிகாப்டரை அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களும், பொல்லார்ட் 7 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி கடைசி 5 ஓவர்களில் 77 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.