பயிற்சியின்போது மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பது, புனேவுக்கு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது என ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சென்னை வீரர்களும் சென்னை அணி நிர்வாகமும் ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்கள்.
ரசிகர்களுக்கு எப்போதும் சென்னை அணி நிர்வாகமும் வீரர்களும் முக்கியத்துவம் அளித்து வருவது ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
சிஎஸ்கே அணியினரின் வித்தியாசமான தமிழ் புத்தாண்டு வாழ்த்து! - மைக் ஹஸி
கொல்கத்தா: சென்னை அணி வீரர்களுக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்களை தமிழில் எழுதி ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சென்னை அணி வீரர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
CSK
அதற்கு மற்றொரு சான்றாய் இன்று தமிழ் புத்தாண்டைக் கொண்டாடிவரும் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமான முறையில் கூறியுள்ளனர். சென்னை ரசிகர்கள் சென்னை வீரர்களுக்கு சூட்டிய செல்லப்பெயர்களை தமிழில் எழுதி புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
அதில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் தமிழ் எழுத்து, இம்ரான் தாஹிர் எழுதிய வார்த்தைகள், மைக் ஹஸி கூறியது என அந்த வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.