தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கே அணிக்காக மீண்டும் பாடும் 'சாம்பியன்' பிராவோ! - 'சாம்பியன்'

சென்னை: சிஎஸ்கே அணிக்காக 'சாம்பியன்' என்னும் பாடலை டிஜே பிராவோ பாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிராவோ

By

Published : Apr 25, 2019, 10:50 AM IST

12ஆவது ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் சாம்பியன் பிராவோ, ரசிகர்களுக்காக சென்னை அணி குறித்த பாடல் ஒன்றை மீள் உருவாக்கம் செய்து பாடியுள்ளார்.

பிராவோ தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தாலும், பாடல் ஆல்பங்களையும் தொடர்ந்து பாடி வெளியிட்டு வருகிறார். தமிழிலும் பாடல் ஒன்று பாடிய வீடியோ வெளியாகியது.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து சென்னை அணி ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், சென்னை அணியின் குதூகலமான வீரர் சாம்பியன் பிராவோ சிஎஸ்கே அணிக்காக தனது சாம்பியன் என்னும் பாடலை மீள் உருவாக்கம் செய்து பாடியுள்ளார். அதன் உருவாக்க வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

முன்னதாக சாம்பியன் என்னும் பாடலை கறுப்பின மக்கள் கொண்டாடும் வகையில் வெளியிட்டு, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது சென்னை அணி வீரர்கள் குறித்து சாம்பியன் என்னும் வரிகளோடு குழந்தைகளிடம் கூறுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details