கொல்கத்தா- சென்னை அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் சென்னை பந்து வீசியது. அப்போது அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசிய கூக்லி பந்துவீச்சை இளம் பேட்ஸ்மேன் கில் தவறவிட்டார். தவறவிட்ட பந்து தோனி கையில் சிக்கியதும் அவர் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்டு செய்தார்.
தோனி கையில் பந்துபோனது; உற்சாகத்தில் குதித்த தாஹிர்! - தோனி
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், சென்னை வீரர் தாஹிர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் தவறவிட, தோனி ஸ்டம்ப்டு செய்வதற்கு முன்னதாகவே இம்ரான் தாஹிர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அப்போது அதன் முடிவு மூன்றாம் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டு, அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் பந்துவீசிய தாஹீர், தோனியிடம் பந்து சென்றதும், அவர் ஸ்டம்ப்டு செய்வதற்கு முன்னதாகவே விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்தார். அவரது இந்த செயல் தோனி மீது தாஹீர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தோனி பல்வேறு போட்டிகளில் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்டு செய்து எதிரணியினரை கலங்கடித்து வருவதும், அவர் கையில் பந்து போனால் பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு நடையைக்கட்டுவதும் வழக்கமாகி இருக்கும் சூழலில், தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் விக்கெட் விழும் முன்னரே தோனி கைக்கு பந்து சென்றால் அது விக்கெட்டாகத்தான் மாறும் என்று முடிவெடுக்க தொடங்கியிருப்பது இனி வாடிக்கையாகும் எனவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.