தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடந்த சிறந்த போட்டிகள்! - மும்பை இந்தியன்ஸ்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை - சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மறக்க முடியாத ஆட்டங்கள் குறித்து ஓர் சிறப்பு பார்வை.

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடந்த சிறந்த போட்டிகள்

By

Published : Apr 3, 2019, 5:48 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பரம எதிரிகளான மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டியோ, அதுபோல ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை, அந்தளவிற்கு போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

2010இல் சென்னை அணி, மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணி, 2013, 2015இல் சென்னை தோற்கடித்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இவ்விரு அணிகளும் இதுவரை தலா மூன்றுமுறை ஐபிஎல் கோப்யை வென்றுள்ளன.

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடந்த சிறந்த போட்டிகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், மும்பை அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 11 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதில், ஏராளமான போட்டிகள் நைல் பைட்டிங் ஃபினிஷாகத்தான் இருந்துள்ளது. அதில், ரசிகர்களால் மறக்கமுடியாத போட்டிகள் குறித்து ஓர் சிறப்பு பார்வை.

1. 4,6,4... டூவையின் ஸ்மிதின் ஃபினிஷ் (2012)

2012இல் மும்பையை த்ரில் வெற்றிபெற செய்த ஸ்மித்

2012இல் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 174 ரன் இலக்குடன் ஆடிய மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சென்னை வீரர் பென் ஹில்ஃபென்ஹால் வீசிய மூன்று பந்துகளை 4, 6, 4 என அடித்து மும்பை அணியை த்ரில் வெற்றிபெற செய்தார் டூவையின் ஸ்மித்.

2. ஹர்திக் பாண்டியாவின் மூன்று சிக்ஸ் (2015)

2015இல் நெகியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹர்திக் பாண்டியா

2015ஆம் ஆண்டில், சென்னை அணயின் சொந்த கோட்டையிலேயே மும்பை அணி தோல்வி அடைய வேண்டிய போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது. 159 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பெரும்பாலான ரசிகர்கள் சென்னை அணிதான் வெற்றிபெறும் என நினைத்தனர்.

ஆனால், நடந்ததோ வேறு. 19ஆவது ஓவரை வீசிய நெகியின் பந்துவீச்சை ஹர்திக் பாண்டியா துவம்சம் செய்தார். குறிப்பாக, அந்த ஓவரில் அவர் மட்டுமே மூன்று சிக்சர் அடிக்க, மறுமுனையில் தன்பங்கிற்கு ராயுடு ஒரு சிக்சர் அடித்தார். இதனால், மும்பை அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

3. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை அழவிட்ட சென்னை (2018)

2018ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இவ்விரு அணிகள் மோதின. இதில், 165 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணி 17 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 119 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால், போட்டியில் வெற்றிபெற இறுதி மூன்று ஓவரில் 48 ரன்கள் தேவைபட்டது. இதனால், மும்பை அணிதான் வெற்றிபெறும் என்று நினைத்து அவர்களது ரசிகர்களுக்கு பிராவோவும், கேதர் ஜாதவும் முகத்தில் கறியை பூசினர்.

2018இல் மும்பை அணிக்கு எதிராக பிராவோ 70 ரன்கள் அடித்தார்

மெக்லனகன் வீசிய 18ஆவது ஓவரில் பிராவோ இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என 20 ரன்களை எடுத்தார். பின் யார்கர் மன்னனான பும்ரா வீசிய 19ஆவது ஓவரில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற 7 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது, பிராவோ அவுட் ஆனார். முன்னதாக, இப்போட்டியில் தசைப்பிடிப்பு காரணத்தால், கேதர் ஜாதவ் பாதியிலேயே வெளியேறினார்.

2018இல் கேதர் ஜாதவின் ஃபினிஷ்

இதனால் பிராவோ அவுட் ஆனதும் மும்பை அணி வெற்றிபெற்றதாக துள்ளிக்குதித்த அம்பானியின் மகன், கேதர் ஜாதவ் களத்தில் வந்ததும் வாயயடைத்து போனார். இதன்பின் முஸ்தாஃபிஸூர் ரஹ்மான் வீசிய 20ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் அடிக்காத கேதர் ஜாதவ், நான்காவது பந்தில் சிக்ஸ், ஐந்தாவது பந்தில் பவுண்டரியை அடித்து சிஎஸ்கே ரசிகர்களின் பதற்றத்தை குறைத்தார். இதனால் சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை அவர்களது சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details