ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே 2-0 என்று தொடரை பாக். வென்ற நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் ஆடியது.
இந்தப் போட்டியுடன் ஜிம்பாப்வே அணியின் சிகும்புரா ஓய்வுபெற உள்ளதால், பாகிஸ்தான் அணி வீரர்கள் சார்பாக அவர் பேட்டிங்கிற்கு களமிறங்கியபோது கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்தது. பாக். சார்பாக உஸ்மான் காதிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் இலக்கை எட்டியது. அதில் அதிகபட்சமாக அப்துல்லா 41 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
இதையும் படிங்க:கப் அடிக்கா விட்டாலும் டெல்லி ப்ளேயர்ஸ் மேல நம்பிக்கை வைங்க'