நாட்டிங்காம் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆக.4) நாட்டிங்காம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணி அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்தை இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் எதிர்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஷார்ட்-லெந்த் பந்து அவரின் தலையை பதம் பார்க்க ஆடுகளத்தில் மயாங்க் வலியில் துடித்துள்ளார்.
மூளையதிர்ச்சி சோதனை
இதுகுறித்து துணைக் கேப்டன் அஜிங்கயா ரஹானே கூறுகையில்,"மயாங்க் அகர்வாலுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் இன்னும் சரியாகவில்லை. மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.