தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND LEEDS TEST: இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலை - SIRAJ

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 432 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டாகியுள்ளது.

ராபின்சன், ஓவர்டன், overton, robinson
ENGLAND LEADS INDIA IN FIRST INNINGS

By

Published : Aug 27, 2021, 4:22 PM IST

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஆக. 25) லீட்ஸ் நகரத்தின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் (42.4 ஓவர்கள்) 78 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

முதல் இரண்டு நாள்கள்

இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்களை குவித்திருந்தது.

தொடங்கியது மூன்றாம் நாள்

இந்நிலையில், ஓவர்டன் 24 ரன்களுடனும், ராபின்சன் ரன் ஏதும் இன்றியும் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் ஓவர்டன் பவுண்டரிக்கு விரட்டினார்.

ஜடேஜா வீசிய அடுத்த ஓவர் மெய்டனானது. இதையடுத்து, மூன்றாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாம் பந்தில், ஓவர்டன் போல்டானர். அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 32 ரன்களை எடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து ராபின்சனும் பும்ரா பந்துவீச்சில் போல்டாக, இங்கிலாந்து அணி 432 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

ஷமி 4 விக்கெட்

இதன்மூலம், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணியைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சற்று தாமதமானது.

இதையும் படிங்க: பயிற்சியில் குறைவு; ஆட்டத்தில் நிறைவு - ஆண்டர்சன் ரகசியம்!

ABOUT THE AUTHOR

...view details