தென் ஆப்பிரிக்காவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிலவிய அசாதாரண சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நாடு திரும்பியது.
தென்னாப்பிரிக்காவிலிருந்த வருகைதரும் அனைவரும் தங்களை இரண்டு வாரத்திற்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து டிசம்பர் 10ஆம் தேதி பிரிட்டனுக்குத் திரும்பிய வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக அவர்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் புதன்கிழமை தெரிவித்தார்.