தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: டாஸ் வென்றார் கோலி; இந்தியா பேட்டிங்! - BUMRAH

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே வீரர்களுடன்தான் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

டாஸ் வென்றார் கோலி
டாஸ் வென்றார் கோலி

By

Published : Aug 25, 2021, 3:33 PM IST

லீட்ஸ் (இங்கிலாந்து):இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் இன்று (ஆக. 25) தொடங்குகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மீண்டும் ஜடேஜா

இந்திய அணி ஆடும் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்ளி, மார்க் வுட் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா, கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதனால், அவருக்கு மாற்றாக அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி: ரோரி ஜோசப் பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், சாம் கரன், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணி:ரோகித் சர்மா, கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்: சோனல்பென் மதுபாய் படேல் தோல்வி

ABOUT THE AUTHOR

...view details