தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இலங்கைக்கு புறப்பட்டது தவான் - டிராவிட் இந்திய இளம் படை! - இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இன்று (ஜுன் 28) மும்பையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டது.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி, இந்தியா vs இலங்கை, இந்திய அணி அறிவிப்பு
Dhawan-led Indian team departs for Sri Lanka tour

By

Published : Jun 28, 2021, 4:40 PM IST

Updated : Jun 28, 2021, 4:51 PM IST

மும்பை: வரும் ஜுலை மாதம் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, ஜடேஜா என முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஷிகார் - டிராவிட் கூட்டணி

இதனால் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு, ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி கடந்த ஜுன் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியின் தலைமை பயற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

முடிந்தது குவாரன்டைன்

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் இந்திய அணி வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பயிற்சியாளர் டிராவிட். கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் நேற்று (ஜுன் 27) காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

உலக கோப்பை இந்திய அணியில்...

அப்போது பேசிய ராகுல் டிராவிட்,"இந்த ஆண்டு பிற்பாதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் கடும் போட்டி நிலவும். இலங்கைக்கு சென்று தொடரை வெல்வதே முக்கிய குறிக்கோள் என்றாலும், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உலக கோப்பை அணி தேர்வர்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது" என்றார்.

டிராவிட் உடனான அனுபவம்

தொடர்ந்து பேசிய தவான்,"இந்திய அணிக்கு கேப்டனாக விளையாட இருப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் இந்திய 'ஏ' அணிக்கு கேப்டனாக இருந்தபோது ராகுல் டிராவிட் பயிற்சியின்கீழ் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

ஆதலால், இந்த சுற்றுப்பயணத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறேன். ஒன்றிணைந்து செயல்பட்டு, வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர தீவிரமாக முயற்சிப்போம்" எனக் கூறினார்.

தொடங்கியது பயணம்

இந்நிலையில், 25 பேர் கொண்ட இந்திய அணி மும்பையிலிருந்து இன்று விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டது. வரும் ஜூலை 13, 16, 18ஆம் தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும், ஜூலை 21, 23, 25ஆம் தேதிகளில் மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குர்னால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.

வலைபயிற்சி பந்துவீச்சாளர்கள்:இஷான் பரோல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷார், சிமர்ஜூத் சிங்.

இதையும் படிங்க: யூரோ 2020: அபார வெற்றிபெற்று டென்மார்க் காலிறுதிக்கு முன்னேற்றம்

Last Updated : Jun 28, 2021, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details